Moon Worship

*பாபிலோனிலே குறிப்பிட்ட ஒரு நாளில் உயரமான பனை மரத்தை போன்ற ஒரு மரத்தை தங்களது விக்கிரக கோயிலருகில் நட்டு வைத்து அதன் மீது ஓலைகளை கட்டி அதனை தீக்கொளுத்தி விடுவர். இதன் நம்பிக்கை என்னவென்றால் சொர்க்கத்திற்கு செல்லத்தகுதியில்லாத ஆத்துமாக்கள் தன்னை அக்கினியில் செலுத்தி தன்னுடைய ஆத்துமாவை சொர்க்கம் செல்ல சுத்திகரித்து கொண்டு அங்கு எழும் புகை தூபத்தில் ஏறி சொர்க்கத் தேவதையின் அனுமதியோடு சொர்க்கம் செல்கிறது என்பதாகும்.*

*பணியாரம் சுடும் மற்றும் பானபலி(குழம்பு) செய்யும் திருவிழா:*

இதற்கு இணையான செயல்பாடு பரிசுத்த வேதத்தில் எரேமியா 7:18ல் அன்று கர்த்தருடைய ஜனங்கள் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் *எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்;அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள் என்று கர்த்தர் மனம் குமுறுகிறதைக் காண்கிறோம்.*

எரேமியா 44:17ல் *வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்தது போலவே செய்வோம்* என்று கர்த்தருடைய ஜனங்கள் கண்மூடித்தனமாக அடம் பிடிக்கிறதை காண்கிறோம். 

*வானராக்கினி என்பது பாபிலோனிய பதத்தின்படி இஷ்டார் தேவதை எனப்படுகின்றது. இந்த இஷ்டார் யாரென்றால் வானலோக ராணி என்றும் எகிப்திய பதத்தின்படி நிலவு தேவதை என்றும் அறியப்படுகிறது.*

*இதன்படி பணியாரம் சுடும் மற்றும் பானபலி(குழம்பு) செய்யும் திருவிழாவின் மறைமுகமான நோக்கமானது மாபெரும் தீயை உண்டாக்குவதும் அதனால் ஏற்படும் புகையை தூபமாக வானராக்கினிக்கு செலுத்துவதுமேயன்றி வேறொன்றுமில்லை.*

*கிறிஸ்தவ அசனப்பண்டிகை:*

இந்தியாவில் தென்னகங்களில் மிகவும் பெருமையாக கொண்டாடப்படும் கிறிஸ்தவ பண்டிகைகளில் ஒன்று அசனப்பண்டிகை. இது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் பல உள்ளன:

*அன்றைய நிலை:*

1. வறுமையினால் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட ஏங்கியவர்க்கு உணவளிப்பது.

2. கிராமங்களில் ஆங்காங்கே தீ விபத்து, காலரா போன்ற கொள்ளை நோய் ஏற்பட்ட பொழுது இறைவனின் கோபத்தைத் தணிப்பதற்கு அன்னதானம் ஏற்படுத்தவேண்டும் என்ற மூடநம்பிக்கை.

3. பிற மதத்திலிருந்து கிறிஸ்தவத்தை தழுவியவர்கள் முந்தைய மத கோயில் கொடைகளில் ரகசியமாக கலந்து கொள்வதை தடுக்க.

4. தொழில், பணி நிமித்தமாக வெளியூர், வெளிநாடு சென்ற விசுவாசிகள் வருடமொருமுறையேனும் சொந்த ஊர் வந்து தன்னை ஆசீர்வதித்த தேவனை ஆலயத்தில் துதித்து, அசன ஆயத்தத்தில் வேலை செய்து, உறவுகளை புதுப்பித்து உணவு உண்டு செல்ல. 

*இன்றைய நிலை:*

1. அடுத்த வேளை உணவு குறித்த கவலை இல்லாத பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. இல்லை என்று எதிர்ப்பு வாதம் எழுந்தாலும் அத்தகைய வருமையில் உள்ளோரின் தேவையை ஆலய அசனங்களே வருடமுழுவதும் பூர்த்தி செய்கிறதா?

2. இன்று போல் அல்ல! அன்றைய வீடுகள் குடிசை வீடுகள், எனவே அதிக தீ விபத்துக்கள், மருத்துவ வசதி குறைவு, மருத்துவத்தை குறித்ததான விழிப்புணர்வு குறைவு, மருத்துவத்தை எளியோர் பெற்றுக்கொள்ளமுடியாத வறுமைநிலை எனவே கொள்ளை நோய் அதிகம்.

3. கிறிஸ்தவ விசுவாசப்பற்று பெருகியுள்ளது.

4. பெரும்பாலான வெளியூர் விசுவாசிகள் தங்களது தொழில், குழந்தைகளின் கல்வி நிமித்தமாக அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை இது போன்ற காரணங்களினால் ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையில் தேவனை துதித்து மறுநாளே நிகழும் ஐக்கிய விருந்தில் பங்கு பெற்று தங்களிடத்திற்குத் திரும்புகின்றனர்.

*அசனத்தின் இன்றைய பயன் என்ன?*

1. அசனம் எந்த வகையில் இறைவனை மகிழ்விக்கின்றது?

2. அசனம் திருச்சபைக்கு எத்தகைய நலன் பயக்கின்றது? 

3. அசனத்தினால் பயனடைந்த பிற மதத்தினர் எத்தனை பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர்? 

4. அசனம் பிறமதத்தினரை எவ்வாறு கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்துகின்றது?

கிறிஸ்து திருச்சபைக்கு விட்டுச்சென்ற இறுதிக் கட்டளையான(மத்தேயு 28:19,20) சுவிசேஷ பணியை முழுமையாக செய்யவிடாதவாறு திருச்சபையோரின் ஈடுபாட்டை, நேரத்தை, கவனத்தை, பெலத்தை, தங்கள் காணிக்கையை இது போன்ற பாரம்பரிய காரியங்களில் நய வஞ்சகமாக திருப்பி விட்டுவிட்டு எதிரி தனது ராஜ்ஜியத்தை மிகப்பெரியதாக கட்டிக்கொண்டிருக்கின்றான்.
நாமோ! எரேமியா 44:17ல் கூறியுள்ளபடி வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்தது போலவே செய்வோம் என்று கர்த்தருடைய ஜனங்கள் கண்மூடித்தனமாக அடம் பிடிக்கிறதை போன்றே அடம் பிடித்து கர்த்தருக்கு கொடுக்கிறதாக நினைத்து மக்கள் கொடுக்கும் பல லட்ச காணிக்கைகளை அசனத்திற்காக செலவு செய்து உணவின் ஒரு பகுதியை(லூக்கா 8:32)கிறிஸ்துவினால் துரத்திவிடப்பட்ட லேகியோன் பிசாசு புகுந்துள்ள பன்றிகள் தின்று கொழுப்பதற்கு அசன உணவை சாக்கு பைகளில் அடைத்து செல்ல வாகன வசதியும் செய்துகொண்டிருப்போம் வருங்காலங்களில்.

எருசலேம் தேவாலயத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் இரகசிய கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தனர், சுவிசேஷப் பணிக்கு தங்களால் ஏதும் ஆதரவு செய்யமுடியவில்லை, அவ்வாறு செய்தால் தங்களது யூத அடையாளத்தையும், தேவாலயத்தின் யூத பாரம்பரியங்களினால் தங்களுக்கு கிடைக்கின்ற ஆதாயத்தையும்,
அந்தஸ்தையும் இழக்க நேரிடும் என அஞ்சி தங்களது பாரம்பரியத்திலேயே ஊறி, மூழ்கி வாழ்ந்து வந்தனர்.

*விளைவு கி.பி.70ல் எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுகின்றது, இந்நாள் வரை கட்டப்படவில்லை, எருசலேமைச் சார்ந்திருந்த அனைவரும் சிதறிப்போனார்கள்.*

*அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது.*

ரோமர் 11:9

Comments

  1. கருத்து சரியானது தான்

    ReplyDelete

Post a Comment